states

img

ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்!

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் (ஜேஎம்எம்) கட்சித் தலைவரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனுக்கு நிலக்கரி சுரங்க ஊழலில் தொடர்புள்ளதாகக் கூறி, நேற்று இரவு அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. 
இதற்கிடையில் அமலாக்கத்துறையின் கைது நெருக்கடியால் இரவு 9 மணியளவில் தனது கட்சி எம்எல்ஏ-க்கள் மற்றும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ராஜினாமா செய்தார். 
இந்நிலையில், இன்று ஹேமந்த் சோரனை ராஞ்சி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தினர். அப்போது ஹேமந்த் சோரனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

;